×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.42,848க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.42,848க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நாட்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.44,168க்கு விற்கப்பட்டது. 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. 25ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்து ஒரு பவுன் ரூ.44,160க்கு விற்கப்பட்டது.

26ம் தேதி பவுன் ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.44,040க்கும், 27ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.43,840க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் 28ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடி சரிவை சந்தித்தது. 29ம் தேதி மட்டும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,410க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.43,280க்கும் விற்கப்பட்டது. செப்.30ம் தேதியும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,390க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.43,120க்கும் விற்கப்பட்டது.

இந்த விலை குறைவு தொடர்ந்து நீடித்து. செப்.30ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,360க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு பவுன் ரூ.42,880க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.42,848க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து 5,356க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.42,848க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Savaran ,Dinakaran ,
× RELATED மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா?